BBrother Agency
FinCore இப்போது கிடைக்கும்

அடகுக் கடை மென்பொருள்

அடகுக் கடைகளுக்கு நகைக் கடன், வட்டி, நாள் புத்தகம், பேங்கர் கணக்கு. கீழே இருப்பது உண்மையான app. ஒரு tab-ஐ அழுத்திப் பாருங்கள்.

FinCore: HomeFinCore: LoansFinCore: One loanFinCore: Day bookFinCore: Reports
FinCore on a phoneFinCore on a phoneFinCore on a phone

எப்படி வேலை செய்கிறது

FinCore-உடன் ஒரு நாள்

இங்குள்ள ஒவ்வொரு திரையும் app-இலிருந்தே எடுத்தது.

1

ஒரு நிமிடத்தில் புதிய கடன்

வாடிக்கையாளரைத் தேர்ந்தெடுங்கள், பட்டியலில் நகை வகையைத் தேர்வு செய்யுங்கள், எடை போட்டு புகைப்படம் எடுங்கள். ரசீது அச்சுக்குத் தயார்.

  • தங்கம், வெள்ளி இரண்டுக்கும் தனி ரசீது எண்கள்
  • இன்றைய விலையை வைத்து நகை மதிப்பு தானாக வரும்
  • மதிப்பை விட அதிகம் கொடுத்தால் முன்பே எச்சரிக்கும்
FinCore: A new loan in under a minute
2

எந்தக் கடனைத் திறந்தாலும் பதில் அங்கே

இன்று வரையான வட்டி, கடன் கொடுத்த நாளின் விலை, ஒவ்வொரு வரவும் கூடுதல் கடனும், நகை கடையில் உள்ளதா பேங்கரிடம் உள்ளதா என்பதும்.

  • கடைகள் கணக்கிடும் 30 நாள் மாத வட்டி
  • மூடுதல், புதுப்பித்தல், பகுதி வரவு
  • அச்சிட அல்லது WhatsApp-இல் அனுப்ப ரசீது
FinCore: Open any loan and the answer is there
3

நாளை மூடுங்கள், நிம்மதியாக இருங்கள்

இன்று வந்த, போன ஒவ்வொரு ரூபாயும், கல்லாவில் நீங்கள் எண்ணும் பணத்தோடு ஒப்பிட்டு. மூடிய பிறகு அந்த நாளை யாரும் ரகசியமாக மாற்ற முடியாது.

  • தொடக்கம், வரவு, செலவு, முடிவு இருப்பு
  • எண்ணும்போது குறைவு, அதிகம் தெரியும்
  • மொத்தம் பார்க்காமலேயே பணியாளர் நாளை மூடலாம்
FinCore: Close the day and sleep well
4

எந்த நகை எந்த பேங்கரிடம்

நகையை மறு அடகு வையுங்கள், பேங்கர் வட்டியை மாதா மாதம் செலுத்துங்கள், வாடிக்கையாளர் கடனை மூடும் முன் மீட்டுக் கொள்ளுங்கள்.

  • உங்கள் வட்டி போலவே பேங்கர் வட்டியும் கணக்கிடப்படும்
  • பேங்கரைத் தேர்ந்தெடுத்தால் அவரிடம் உள்ள எல்லா நகைகளும்
FinCore: Know which jewel is with which banker
5

உங்களுக்கும் ஆடிட்டருக்கும் அறிக்கைகள்

எந்த மாதத்துக்கும் ஆண்டுக்கும் இருப்பு நிலை, பில் வாரி லாபம், பேங்கர் கணக்கு, வருமான வரிக்கான Excel கோப்பு.

  • எல்லா எண்களும் ஒரே கணக்கிலிருந்து
  • பதிவிறக்கி அப்படியே கொடுக்கலாம்
FinCore: Reports for you and your auditor
6

உங்கள் பணியாளர், உங்கள் விதிகள்

ஒவ்வொருவருக்கும் தனி login. ஒவ்வொரு அனுமதியையும் on / off செய்யலாம். கடையின் பணக் கணக்கைப் பார்க்காமலேயே பணியாளர் கடன் கொடுக்கலாம், மூடலாம், நாள் புத்தகம் பார்க்கலாம்.

  • உரிமையாளர், மேலாளர், கணக்காளர், பணியாளர்
  • ஒவ்வொரு மாற்றமும் தணிக்கை பதிவில்
FinCore: Your staff, your rules
FinCore: A new loan in under a minuteFinCore: Open any loan and the answer is thereFinCore: Close the day and sleep wellFinCore: Know which jewel is with which bankerFinCore: Reports for you and your auditorFinCore: Your staff, your rules
உங்கள் கைப்பேசியில்

உங்கள் கையிலும்

FinCore: Loans
FinCore: Home
FinCore: One loan
திட்டங்கள்

எளிய ஆண்டுக் கட்டணம்

எல்லா விலைகளும் GST உட்பட. முடிவு செய்யும் முன் 30 நாள் இலவசமாக பயன்படுத்துங்கள்.

இங்கே தொடங்குங்கள்

வாழ்நாள் உரிமம்

₹24,999

ஒரு கடைக்கு, ஒருமுறை, வாழ்நாள் முழுவதும், GST உட்பட
  • ஒரு கடைக்கு Windows, Android app, வாழ்நாள் முழுவதும் உங்களுடையது
  • உங்கள் கடையிலேயே நிறுவி, உங்களோடு அமைத்துத் தருவோம்
  • கடன், நகை, நாள் புத்தகம், பேங்கர், அறிக்கைகள்
  • முதல் ஆண்டு AMC (உதவி, புதுப்பிப்புகள்) உட்பட
இப்போது செலுத்து

ஆண்டு பராமரிப்பு

₹2,499

ஒரு கடைக்கு, ஆண்டுக்கு, GST உட்பட
  • தொலைபேசி, remote மூலம் உதவி
  • Backup, restore செய்ய உதவி
  • கடவுச்சொல் மறந்தால் மாற்றித் தருவோம்
  • புதுப்பிப்புகள், திருத்தங்கள்

AutoPay (ஆண்டுக்கு ஒருமுறை, UPI/card/e-mandate) மூலம் செலுத்துங்கள். எப்போது வேண்டுமானாலும் ரத்து செய்யலாம்.

இப்போது செலுத்து

கிளவுட்

₹899

ஒரு கடைக்கு, மாதத்துக்கு, GST உட்பட
  • உங்கள் கடைக் கணக்கின் நகல் எங்கள் server-இல் (VPS)
  • எல்லா கிளைகளையும் மொபைல், கணினியில் பார்க்கலாம் (app.fincore.store)
  • கடையின் கணினி தொலைந்தால், இந்த நகலிலிருந்து மீட்டுத் தருவோம்
  • கட்டாயம் இல்லை. இது இல்லாமலும் FinCore இயங்கும்

AutoPay (மாதந்தோறும், UPI/card/e-mandate) மூலம் செலுத்துங்கள். எப்போது வேண்டுமானாலும் ரத்து செய்யலாம்.

இப்போது செலுத்து
கேள்விகள்

கடை உரிமையாளர்கள் கேட்பவை

FinCore பயன்படுத்த இணையம் தேவையா?

தேவையில்லை. FinCore உங்கள் கடை கணினியிலேயே இயங்கி, கணக்கை அங்கேயே வைத்திருக்கும். புதுப்பிப்புகளுக்கும், Cloud திட்டம் எடுத்தால் அதற்கும் மட்டுமே இணையம் தேவை.

பணம் செலுத்தும் முன் பயன்படுத்திப் பார்க்கலாமா?

ஆம். புதிதாக நிறுவும் ஒவ்வொன்றும் எல்லா வசதிகளுடன் 30 நாள் இலவசம். அதன் பிறகு உரிமம் key கேட்கும்.

யார் நிறுவித் தருவார்கள்?

நாங்களே. உங்கள் கடைக்கு வந்தோ, remote மூலமோ, உங்கள் விலை, ரசீது எண்களுடன் அமைத்து, பணியாளர்களுக்கு பயன்படுத்தும் முறையையும் கற்றுத் தருவோம்.

என் வாடிக்கையாளர் தகவல் வெளியே போகுமா?

Cloud திட்டத்தை நீங்கள் தேர்வு செய்தால் மட்டுமே. இல்லையென்றால் எல்லாமே உங்கள் கணினியிலும் கைப்பேசியிலும் மட்டுமே இருக்கும்.

கைப்பேசியில் இயங்குமா?

ஆம். இதே மென்பொருள் Android கைப்பேசி, tablet-இலும் இயங்கும். Cloud இருந்தால் உரிமையாளர் மொபைல் browser-இல் எல்லா கிளைகளையும் பார்க்கலாம்.

பழைய கணக்குகள் நோட்டுப் புத்தகத்தில் உள்ளன. அவற்றைச் சேர்க்கலாமா?

ஆம். பழைய கடன்களை Excel தாள் மூலம் சேர்க்கலாம். நிறுவும்போது நாங்களே உதவுவோம்.

உங்கள் வணிகத்துக்கு FinCore வேண்டுமா?

அழையுங்கள். demo காட்டி, உங்களோடு அமைத்துத் தருவோம்.